
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(10), தினேஷ் சண்டிமால்(9) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் காமிண்டு மெண்டிஸ் 16 ரன்னில் ஆட்டமிழக்க, தனஞ்செயா டி சில்வாவும், சாரித் அசலங்காவும் பொறுப்புடன் ஆடி முறையே 31 மற்றும் 47 ரன்கள் அடித்தனர். ஆனால் அவர்கள் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழந்துவிட்டனர். இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்ததால், அந்த அணியின் ஸ்கோர் பெரிதாக உயரவில்லை.
பின்வரிசையில் துஷ்மந்தா சமீரா(29), சாமிகா கருணரத்னே(16) ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, 50 ஓவரில் தட்டுத்தடுமாறி 200 ரன்களை கடந்த இலங்கை அணி 203 ரன்கள் அடித்து, 204 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கு எளிதானது என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா தொடரை வெல்ல வாய்ப்பு அதிகமுள்ளது.