ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் ஆடி 268 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடக்கிற்து. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கருணாரத்னே 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நன்றி சொல்றது ஈஸி, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் (11), ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சரித் அசலங்கா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. டி சில்வா 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த சனாகா 17 ரன்களில் வெளியேறினார். துஷான் ஹேமந்த் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 95 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்திருந்த அசலங்கா 9 ரன்களில் சதம் சாதனையை கோட்டைவிட்டுள்ளார். அவர் 91 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
விராட் கோலி, புஜாராவை காலி செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு – ரிக்கி பாண்டிங்!
கடைசியாக வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் குவித்தது. இதில் பந்து வீச்சில் ஃபசல்ஹக் பரூக்கி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். நபி, நூர் அகமது, முஜீப், அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 269 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 8.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. இதில் குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.