இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புதிதாக ரூ.4 கோடியில் லம்போர்கினி உருஸ் எஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.
மாஸ்டர் பிளாஸ்டர், ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கிரிக்கெட்டில் எந்த அளவிற்கு சச்சின் டெண்டுல்கர் பிரபலமோ, அந்தளவிற்கு அவர் வைத்திருக்கும் கார்களும் பிரபலம். கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வமும், கார்கள் மீதான ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பகவத் கீதையை கொண்டு செல்ல காரணம் என்ன? நீங்களே பாருங்கள் என்று காண்பித்த தோனி!
நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். அவர், 4 போட்டிகளில் விளையாடி 9.5 ஓவர்கள் வீசி 92 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்கில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 13 ரன்கள் எடுத்துள்ளார்.
தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் 16ஆவது சீசன் முடிந்த நிலையில் புதிதாக லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்த லம்போர்கினி உருஸ் எஸ் வகையான கார் ஒன்றை ரூ.4.18 கோடிக்கு சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார்.
விராட் கோலி, புஜாராவை காலி செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு – ரிக்கி பாண்டிங்!
இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மாருதி 800, பிஎம்டபிள்யூ ஐ8, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 760 எல்.ஐ, பிஎம்டபிள்யூ எம்6 கிரான் கூபே, பிஎம்டபிள்யூ எம்5 30 ஜஹ்ரே, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்50டி, போர்ஸ் 911 டர்போ எஸ், வால்வோ எஸ்860, ஃபெராரி 360 மொடெனா என்று ஏராளமான கார்களை வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் தற்போது புதிதாக லம்போர்கினி உருஸ் எஸ் என்ற வகையான கார் ஒன்றையும் இணைத்துள்ளார்.