விராட் கோலி, புஜாராவை காலி செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு – ரிக்கி பாண்டிங்!

By Rsiva kumar  |  First Published Jun 2, 2023, 1:44 PM IST

முதலில் விராட் கோலி மற்றும் புஜாராவின் விக்கெட்டை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்வது என்பது கடினமானது ஆகும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், இந்திய வீரர்கள், இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி என்றால் அது விராட் கோலி மற்றும் புஜாராவிற்கு லட்டு சாப்பிடுற மாதிரி தான். கடந்த 2014 ஆம் ஆண்டு விராட் கோலியும், 2020-21 ஆம் ஆண்டுகளில் புஜாராவின் ஆஸ்திரேலிய வீரர்களை ஒரு வழி ஆக்கிவிட்டனர்.

5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ரெட் பால் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வீரர்கள் பற்றி ஆஸ்திரேலிய அணியினருக்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகவத் கீதையை கொண்டு செல்ல காரணம் என்ன? நீங்களே பாருங்கள் என்று காண்பித்த தோனி!

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாவது: ஐபிஎல் தொடரில் நடந்து வந்த போது அதில் இந்திய வீரர்கள் இடம் பெற்று விளையாடி வந்தனர். ஆனால், புஜாரா மட்டும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இங்கிலாந்து சக்ஸஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்தின் சூழலுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.

தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்

அதே போன்று ஐபிஎல் கிரிக்கெட்டின் மூலமாக விராட் கோலி தான் சிறந்த ஃபார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியா மைதானத்தைப் போன்று தான் ஓவல் மைதானமும் இருக்கும் என்பதால், இங்கு ஃபார்மில் இருக்கும் புஜாரா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்துவிட வேண்டும். அப்படி அவர்களது விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றால், அது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

click me!