பகவத் கீதையை கொண்டு செல்ல காரணம் என்ன? நீங்களே பாருங்கள் என்று காண்பித்த தோனி!

By Rsiva kumarFirst Published Jun 2, 2023, 12:21 PM IST
Highlights

அறுவை சிகிச்சைக்கு சென்ற தோனி கையில் பகவத் கீதையை எடுத்துச் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று மும்பை மருத்துவமனையில் இடது முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸை ஐந்தாவது ஐபிஎல் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற தோனி, திங்கள்கிழமை இறுதிப் போட்டிக்குப் பிறகு அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் பறந்து, பிசிசிஐ மருத்துவக் குழுவில் உள்ள பிரபல விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார்.

தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்

இதையடுத்து அவரது ஆலோசனையில் பேரில், தோனி மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது குறித்து சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியிருப்பதாவது: தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்னிடம் விவரங்கள் இல்லை. அறுவை சிகிச்சை மற்றும் பிற விஷயங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

தனது முதல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்: ஆப்கானிஸ்தான் பவுலிங்!

"அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரது விரிவான மறுவாழ்வு தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவதற்கு அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது" என அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு செல்வதற்கு முன்னதாக தோனி கையில் பகவத் கீதை புத்தகத்தையும் எடுத்து சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளஙளில் வைரலாகி வருகிறது.

 

MS Dhoni reading the Bhagavad Gita. pic.twitter.com/lla0rtWWkX

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!