இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோடா மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
ஏன் மூடிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவதில்லை தெரியுமா?
அதன்படி இலங்கை அணி தற்போது விளையாடி வருகிறது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய மதீஷா பதிரனா இன்றைய போட்டியின் மூலமாக தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு புதிய ஜெர்சி! ஆஸி.யை வீழ்த்த ராசியாக இருக்குமா?
இலங்கை:
பதுன் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, கவுசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் சனாகா (கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷான் ஹேமந்த், கசுன் ரஜிதா, மதிஷா பதிரனா, லகிரு குமாரா.
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மடுல்லா ஷகிதி (கேப்டன்), நஜிபுல்லா சத்ரான், முகமது நமி, அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத் மாலிக்.
தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்