மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்படாமல் இருக்க மூடிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்தப்பட்டால் அது பீல்டர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலகம் முழுவதும் அதிகளவில் புகழ்பெற்ற விளையாட்டுகளில் கிரிக்கெட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 100க்கும் அதிகமான நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வந்த பிறக் பல விளையாட்டுகள் காணாமல் போய்விட்டன. அந்தளவிற்கு ரசிகர்களிடம் அதிகளவில் கிரிக்கெட் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு புதிய ஜெர்சி! ஆஸி.யை வீழ்த்த ராசியாக இருக்குமா?
அப்பட்டிப்பட்ட கிரிக்கெட் இதுவரையில் திறந்த ஸ்டேடியங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்துள்ளன. அப்படி திறந்த் ஸ்டேடியங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் போது மழை குறுக்கீடு இருந்தால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மழை நிற்காமல் பெய்தால் போட்டி ஒத்தி வைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்
அப்படி ஒரு நிகழ்வு தான் நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் நடந்தது. இதில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. கடந்த மே 28 ஆம் தேதி நடக்க இருந்த போட்டி மழை காரணமாக மறுநாள் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்தப் போட்டியிலும் 2ஆவது இன்னிங்ஸின் போது மழை பெய்தது. இதன் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு வெற்றியின் இலக்கும் குறைக்கப்பட்டது. இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் போட்டிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஏன் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் ரூப் டாப் மூடப்படலாமே என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரூப் டாப் மூடிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய அமைப்பினர் ஆதரவு
காரணம் 1:
பிட்ச்சின் தன்மையை சார்ந்துள்ளது. வானிலையின் மாற்றங்கள் காரணமாக பிட்ச் தன்மை மாறுபடுகிறது. அது, ஸ்விங் ஆவதும், சீம் ஆவதும் எல்லாம் வானிலை மாற்றம் காரணமாக ஏற்படக் கூடியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வானிலை மாற்றங்கள் காரணமாக ஸ்விங் மற்றூம் சீம் அதிகளவில் நிகழும். இவை தவிர மற்ற துணைக்கண்டங்களில் ஸ்பின் தான் அதிகளவில் ஏற்படும். இதுவே மூடப்பட்ட மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டால் வானிலை மாற்றத்திற்கு வாய்ப்பிருக்காது. மேகமூட்டமாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
காரணம் 2:
முக்கியமான காரணம் பட்ஜெட். பெரும்பாலான நாடுகளில் கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. எனினும், ரூப் டாப் மூடுவதற்கு எந்த கிரிக்கெட் வாரியத்திடமும் போதுமான நிதியில்லை. ரூப் டாப் அமைப்பதற்கு 2 மடங்கு செலவு ஏற்படக் கூடும் என்பதால், கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ரூப் டாப் அமைக்கப்படவில்லை.
காரணம் 3:
மூன்றாவது காரணம் பீல்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்கும் போது அது உயரத்திற்கு சென்று ரூப் டாப்பில் பந்து பட்டு எங்கு செல்கிறது என்று தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போகக் கூடும். இது போன்ற காரணங்களால் தான் மூடப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியங்கள் பயன்படுத்தப்படவில்லை.