டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு புதிய ஜெர்சி! ஆஸி.யை வீழ்த்த ராசியாக இருக்குமா?

By SG BalanFirst Published Jun 1, 2023, 11:54 PM IST
Highlights

ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இந்த புதிய சீருடை அணிந்து விளையாடும்.

விளையாட்டுக்கான ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனமான அடிடாஸ், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கான சீருடையை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பு அம்சமாக தோள் பகுதியில் 3 கோடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மே மாதம், வெவ்வேறு வயது பிரிவுகளில் உள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கான கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பல ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் இந்த புதிய ஜெர்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்

வியாழக்கிழமை அடிடாஸ் இந்தியா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஜெர்சியின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

அடிடாஸ் வெளியிட்டுள்ள புதிய ஜெர்சிகளின் படத்திற்குப் பின்னணியாக மும்பையில் உள்ள வான்கடே மைதானம் இடம்பெற்றுள்ளது. புதிய ஜெர்சியில் பொதுவான அம்சமாக தோள்பட்டைப் பகுதியில் மூன்று கோடுகள் உள்ளன. இது டெஸ்ட் ஜெர்சியில் அடர்நீல நிறத்தில் மூன்று கோடுகள் காணப்படுகின்றன. நீல நிறத்தில் உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஜெர்சியில் வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கின்றன.

நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய அமைப்பினர் ஆதரவு

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by adidas India (@adidasindia)

ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது இந்த புதிய ஜெர்சியை இந்திய அணியினர் முதல் முறையாக அணிந்து விளையாடுவார்கள். டெஸ்ட் சாம்பியன் பட்டத்துக்கான அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு ஏற்கெனவே லண்டன் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் சசெக்ஸில் உள்ள அருண்டெல் கேஸில் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிசிசிஐ அடிடாஸ் நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு கிட் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐபிஎல் போட்டியின்போது இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

click me!