ஒரு நாள் போட்டியில் அதிக முறை தோற்ற அணி என்ற சாதனையை படைத்த இலங்கை!

By Rsiva kumarFirst Published Jan 13, 2023, 11:09 AM IST
Highlights

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஒரு நாள் போட்டியில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியுற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய கே எல் ராகுல் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

ட்ரோன் பிசினஸில் இறங்கிய தோனி..! "Droni" என்ற கண்காணிப்பு ட்ரோன் அறிமுகம்

குல்தீப் யாதவ் வின்னிங் ஷாட் அடித்து கொடுக்க இந்திய அணி 43,2 ஓவர்களில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது.

எஸ்ஏ20:போட்டியை வேடிக்கை பார்த்த காவ்யா மாறன்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அபார வெற்றி!

இந்த நிலையில், இது வரையில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. இதுவரையில் இலங்கை அணி 437 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதே போன்று இந்தியாவும் 436 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. பாகிஸ்தான் 419 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BBL: பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்! அடிலெய்ட் அணியை தூசி போல ஊதித்தள்ளிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி

click me!