எஸ்ஏ20:போட்டியை வேடிக்கை பார்த்த காவ்யா மாறன்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அபார வெற்றி!

By Rsiva kumar  |  First Published Jan 13, 2023, 9:41 AM IST

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


எஸ்ஏ20 எனப்படும் தென்னாப்பிரிக்காவில் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வெற்றி வாகை சூடியது. 12 ஆம் தேதி நடந்த 2ஆவது போட்டியில் ஜோபர்க் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 3ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

புகழ் மழை பொழிந்த ஜெய் ஷாவுக்கு சாதனை நாயகன் பிரித்வி ஷா நன்றி..!

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி முதலில் ஆடிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் சால்ட் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அவுட்டாகமல் இருந்த சால்ட் 47 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 77 ரன்கள் குவித்தார். இறுதியாக பிரிட்டோரியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் மார்க்ரம் மற்றும் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜான்சென், மகாலா ஆகியோர்  தலா ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினர்.

இந்திய அணிக்கு டஃப் ஃபைட் கொடுத்த இலங்கை! ராகுல் அரைசதத்தால் 2வது ODI-யில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா

இதையடுத்து 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் ஸ்முட்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 4 சிக்சர்கள் 6 பவுண்டர்கள் உள்பட 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டாம் அபெல் 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் பிரிட்டோரியா அணியின் பிலிப் சால்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! காரணத்துடன் புகழாரம் சூட்டிய கம்பீர்

இன்று நடக்கும் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 9 மணிக்கு நடக்கிறது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. பார்ல் ராயல்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!