ஆஃப்கானிஸ்தான் தொடரில் ஆட மறுத்த ஆஸ்திரேலியா..! ரோஷத்துடன் பிக்பேஷ் லீக்கில் இருந்து விலகும் ஆஃப்கான் வீரர்கள்

By karthikeyan VFirst Published Jan 12, 2023, 9:25 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விலகிய நிலையில், பிக்பேஷ் லீக்கை புறக்கணிக்க ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடும் ஆஸ்திரேலிய அணி, அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடுவதாக இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் பெண்கள் மீது தலிபான் அரசு ஒடுக்குமுறையை கையாள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விலகியது ஆஸ்திரேலிய அணி.

ஆஃப்கானிஸ்தான் பெண்கள் கல்வி கற்க, வேலைக்கு செல்ல, விளையாட கடும் கட்டுப்பாடுகளை விதித்து பெண்கள் மீது அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையை கையாண்டுவருகிறது, ஆஃப்கானிஸ்தான் தலிபான் அரசு. 

இந்திய அணிக்கு டஃப் ஃபைட் கொடுத்த இலங்கை! ராகுல் அரைசதத்தால் 2வது ODI-யில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா

பெண் சுதந்திரத்திற்கு எதிரான ஆஃப்கானிஸ்தான் தலிபான் அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் விதமாகவும், அதற்கு எதிர்ப்பு விதமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விலகிவிட்டது ஆஸ்திரேலிய அணி. அரசாங்கம், பங்குதாரர்கள் என அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு எதிராகா ஆடவிருந்த தொடரிலிருந்து விலகியதால், ஆஃப்கானிஸ்தான் வீரர்களும், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதிருப்தியடைந்தது. ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு குறித்து அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கிலிருந்து ஆஃப்கானிஸ்தான் இளம் ஃபாஸ்ட் பவுலர் நவீன் உல் ஹக் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் மட்டும்தான் எங்கள் நாட்டின் நம்பிக்கை. எனவே கிரிக்கெட்டில் அரசியலை கலக்காதீர்கள் என்று டுவீட் செய்துள்ளார் ரஷீத் கான். மேலும், ஆஃப்கானிஸ்தானில் ஆடுவது ஆஸ்திரேலியாவிற்கு சரிவரவில்லை என்றால், பிக்பேஷ் லீக்கில் நான் ஆடுவதில் அர்த்தமேயில்லை. பிக்பேஷ் லீக்கில் ஆடுவது குறித்து யோசிக்க வேண்டும் என்று ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! காரணத்துடன் புகழாரம் சூட்டிய கம்பீர்

பிக்பேஷ் லீக்கில் ஆடிவந்த ரஷீத் கான், இப்போது தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார். பிக்பேஷ் லீக்கில் முகமது நபியும் ஆடும் நிலையில், அவரும் அந்த தொடரிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!