வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து 3ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறியுள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 38ஆவது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 108 ரன்கள் எடுத்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு பந்து கூட விளையாடாமல் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!
பின்னர் வந்த வங்கதேச அணியில் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 90 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்தனர். இறுதியாக வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே வங்கதேச அணி தொடலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இலங்கை அணி 3ஆவது வெளியேறியுள்ளது.
இலங்கை அணி விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இங்கிலாந்து விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
நெதர்லாந்து அணியும் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 5ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. நாளை 40ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. நவம்பர் 12 ஆம் தேதி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்? இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்!