18 ஒய்டா, நொந்து போன கேப்டன் ஷனாகா – தோல்விக்கு இது தான் காரணம்!

By Rsiva kumar  |  First Published Oct 11, 2023, 11:29 AM IST

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா 18 ஒய்டு பந்துகளை வீசி இலங்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்துள்ளார்.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான 8ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசாங்கா 51 ரன்கள், குசால் மெண்டிஸ் 122 ரன்களும், சதீர சமரவிக்ரமா 108 ரன்களும் எடுத்துள்ளனர். இறுதியாக இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு, ஷமிக்கு வாய்ப்பு? இந்திய அணியின் பிளேயிங் 11!

Tap to resize

Latest Videos

அதன் பிறகு கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையில் அறிமுகமான அப்துல்லா ஷபீக் தொடக்க வீரராக களமிறங்கி 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இமாம் உல் ஹக் 12 ரன்னும், பாபர் அசாம் 10 ரன்னும் எடுத்தனர். அதன் பிறகு வந்த முகமது ரிஸ்வான் 131 ரன்னும் எடுக்கவே பாகிஸ்தான் கடைசியாக 10 பந்துகள் எஞ்சிய நிலையில் 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் – 344 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி!

இலங்கை அணியைப் பொறுத்த வரையில் பவுலிங் சிறந்த வீரர் என்று சொல்லப்படும் மதீஷ் பதிரனா 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 90 ரன்கள் கொடுத்து 18 ஓய்டுகள் வீசியுள்ளார். இதே போன்று நேற்றைய போட்டியில் களமிறங்கிய மகீஷ் தீக்‌ஷனா 5 ஒய்டுகள் வீசினார். மேலும், தில்ஷன் மதுஷங்கா 2 ஒய்டுகள் வீசியுள்ளார். இதன் மூலமாக இலங்கை மொத்தமாக 25 ஒய்டுகள் ஒரு நோபால் வீசியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Pakistan vs Sri Lanka: அறிமுக உலகக் கோப்பையிலேயே சதம் அடித்து சாதனை படைத்த அப்துல்லா ஷபீக்!

தோல்விக்குப் பிறகு பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா கூறுகையில், குசால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கிற்கு கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், கடைசியில் பாகிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால், எங்களது அணியில் பந்து வீச்சாளார்கள் அதிகளவில் ஒய்டுகளை வீசினார்கள். ஆனால், அதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். மொத்தமாக 26 எக்ஸ்டிராக்களை அள்ளிக் கொடுத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ENG vs BAN: வரிசை கட்டி அவுட்டான டாப் பிளேயர்ஸ் – வங்கதேசம் 227க்கு ஆல் அவுட்; இங்கிலாந்து முதல் வெற்றி!

வரும் 16 ஆம் தேதி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 14ஆவது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடக்க இருக்கிறது. வரும் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 12ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

click me!