ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 9ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலேயும், முன்வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
உலகக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் – 344 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி!
எனினும், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதே போன்று இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற சில மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Pakistan vs Sri Lanka: அறிமுக உலகக் கோப்பையிலேயே சதம் அடித்து சாதனை படைத்த அப்துல்லா ஷபீக்!
ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிறப்பாக பந்து வீசிய நிலையில், அவர்கள் கண்டிப்பாக இந்தப் போட்டியிலும் இடம் பெறுவார்கள். ஆனால், அஸ்வின் 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். எனினும் இந்த அணி 3 ஸ்பின்னர்களுக்குப் பதிலாக 3 அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கலாம். ஆகையால், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் இணைந்து முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பு உண்டு.
சுப்மன் கில் டெங்கு பாதிப்பால் ஓய்வில் இருக்கும் நிலையில், இந்தப் போட்டியிலும் இஷான் கிஷான் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு 5ஆவது வரிசையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.