2 வீரர்கள் சதம்.. வெஸ்ட் இண்டீஸை வெளுத்தெடுத்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை

By karthikeyan VFirst Published Feb 27, 2020, 11:08 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது இலங்கை அணி. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேரா, முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து குசால் மெண்டிஸும் மிகச்சிறப்பாக ஆடினார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி, சதமடித்தனர். ஃபெர்னாண்டோ சதமடிக்க, அவரை தொடர்ந்து குசால் மெண்டிஸும் சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 239 ரன்களை குவித்தனர். 

119 பந்தில் 119 ரன்களை குவித்த குசால் மெண்டிஸ் 41வது ஓவரில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து 43வது ஓவரில் ஃபெர்னாண்டோ 127 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் திசாரா பேரேரா, தனஞ்செயா டி சில்வா, ஹசரங்கா மற்றும் உடானா ஆகியோரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த, 50 ஓவரில் இலங்கை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்களை குவித்தது. 

346 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப் தான் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினார். அவரை தவிர வேறு யாருமே வெஸ்ட் இண்டீஸ் அணியில் சரியாக ஆடவில்லை. ஷாய் ஹோப் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. 

டேரன் பிராவோ(16), ரோஸ்டான் சேஸ்(20), நிகோலஸ் பூரான்(31), பொல்லார்டு(0), ஹோல்டர்(3) என முக்கியமான வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 39.1 ஓவரில் வெறும் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 161 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, 2-0 என தொடரை வென்றது. 

Also Read - அவரோட கெரியரே முடிஞ்சதுனு நெனச்சேன்.. ஆனால் அவர் கம்பேக் கொடுத்த விதம் அபாரம்.. இந்திய வீரரை புகழ்ந்த மெக்ராத்

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!