அவரோட கெரியரே முடிஞ்சதுனு நெனச்சேன்.. ஆனால் அவர் கம்பேக் கொடுத்த விதம் அபாரம்.. இந்திய வீரரை புகழ்ந்த மெக்ராத்

By karthikeyan VFirst Published Feb 27, 2020, 10:30 AM IST
Highlights

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் பாராட்டி பேசியுள்ளார். 
 

இந்திய அணியின் தற்போதைய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தளவிற்கு சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றதில்லை என்றும் புகழப்படுகிறது. 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகிய சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை ஒரேநேரத்தில் இந்திய அணி பெற்றுள்ளது. இவர்களில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா தான் கோலோச்சுகிறார்கள். 

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷன் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொண்டிருந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஃபாஸ்ட் பவுலிங் சிறப்பாக இல்லை. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் டிரெண்ட் போல்ட், டிம் சௌதி, ஜேமிசன் ஆகியோர் அசத்தலாக வீச, இந்திய பவுலர்களின் பவுலிங் சுத்தமாக எடுபடவேயில்லை. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் பேட்டிங் படுசொதப்பல். பவுலிங் பரவாயில்லை எனுமளவிற்கு இருந்தது. இஷாந்த் சர்மா மட்டுமே முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய பின்னர், அவரது பவுலிங்கில் முன்பிருந்த மிரட்டல் இல்லை. பும்ராவும் ஷமியும் பெரியளவில் சோபிக்காத நிலையில், இஷாந்த் சர்மா மட்டும் சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

காயத்திலிருந்து மீண்டு, உடற்தகுதியை பெற்ற இஷாந்த் சர்மா, முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்புதான் நியூசிலாந்துக்கே சென்று அணியுடன் இணைந்தார். ஆனால் தனது அனுபவத்தை பயன்படுத்தி அபாரமாக பந்துவீசினார். 

இந்நிலையில், இஷாந்த் சர்மாவை முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் லெஜண்ட் மெக்ராத் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இஷாந்த் குறித்து பேசிய மெக்ராத், இஷாந்த் சர்மா நீண்ட அனுபவம் கொண்டவர். அவர் கடந்த 2 ஆண்டுகளில் கம்பேக் கொடுத்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் தன்னை மறுவடிவமைத்துக்கொண்டு, தனது திறமையை மேம்படுத்தி கொண்டு தற்போது அபாரமாக பந்துவீசிவருகிறார். 

Also Read - ஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா? அந்த பையன ஏன் எடுக்கல? அணி நிர்வாகத்தை விளாசிய கபில் தேவ்

இந்திய பவுலிங் யூனிட்டின் மீது எனக்கு இன்னும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஃபாஸ்ட் பவுலர்களால் காயமடைந்தது மட்டும்தான் பின்னடைவு. இஷாந்த் சர்மா காயத்திலிருந்து மீண்டு வந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வருகிறார். ஒரு போட்டியை வைத்து குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணி உலகின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை என்று மெக்ராத் தெரிவித்தார். 
 

click me!