இங்கிலாந்துக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான 25ஆவது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் செய்தது. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்னிலும், டேவிட் மலான் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!
ஜோ ரூட் 3, கேப்டன் ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயீன் அலி 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் குசால் பெரேரா 4 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சின்னசாமி ஸ்டேடியத்தில் 156 ரன்கள் எடுத்து மோசமான சாதனையில் இடம் பிடித்த இங்கிலாந்து!
பதும் நிசாங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். நிசாங்கா 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக தொடர்ந்து 4 முறையாக உலகக் கோப்பையில் அரைசதம் விளாசியுள்ளார். மேலும், இந்த ஆண்டில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் நிசாங்கா 11 முறை அரைசதம் அடித்துள்ளார்.
ENG vs SL: அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டரை களமிறக்கிய இலங்கை; இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
இவரைத் தொடர்ந்து சதீரா சமரவிக்ரமாவும் தொடர்ந்து அரைசதம் அடித்தார். அவர் 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக இலங்கை 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பைப் போட்டிகளில் இங்கிலாந்து தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவுவது இதுவே முதல் முறை.
இந்த வெற்றியின் மூலமாக இலங்கை புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. பாகிஸ்தான் 6ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததன் மூலமாக அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி வரும் 4 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளைப் பொறுத்து இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு அமையும். எனினும், இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.