இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையில் முதலிடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சின்னசாமி ஸ்டேடியத்தில் 156 ரன்கள் எடுத்து மோசமான சாதனையில் இடம் பிடித்த இங்கிலாந்து!
இதில் இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி கடைசியாக 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டேவிட் மலான் 28, ஜானி பேர்ஸ்டோவ் 30, ஜோ ரூட் 3, ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயீன் அலி 15, கிறிஸ் வோக்ஸ் 0 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் கடைசியாக 43 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் வில்லி 14 ரன்களிலும், அடில் ரஷீத் 2 ரன்னிலும், மார்க் வுட் 5 ரன்னிலும் ஆட்டமிழக்கவே இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் நெட் ரன் ரேட் (-1.248) அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ENG vs SL: அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டரை களமிறக்கிய இலங்கை; இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த 168 ரன்கள் தான் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்துள்ளது. தற்போது இங்கிலாந்து அதனை முறியடித்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து
156/10 vs இலங்கை
170/10 vs தென் ஆப்பிரிக்கா
215/10 vs ஆப்கானிஸ்தான்
இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து 5ஆவது போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்னதாக விளையாடிய போட்டிகளில் இங்கிலாந்து 282/9, 364/9, 215/10, 170/10 என்று ஸ்கோர்கள் எடுத்துள்ளது. இதில், அதிகபட்சமாக 364 ரன்களும், குறைந்தபட்சமாக 156 ரன்களும் எடுத்துள்ளது.