இலங்கைக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை தில்ஷன் மதுஷங்கா வீசினார். போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோவ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க வேண்டியது. ரெவியூ எடுக்காததால் அவுட்டிலிருந்து தப்பித்தார்.
ENG vs SL: அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டரை களமிறக்கிய இலங்கை; இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
அதன் பிறகு அவர் 30 ரன்கள் சேர்த்து கசுன் ரஜீதா பந்தில் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 28 ரன்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் நடையை கட்டினார். அடுத்து வந்த ஜோ ரூட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயீன் அலி 15, கிறிஸ் வோக்ஸ் 0 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பான பேட்டிங் ஆர்டர் வைத்துள்ள இங்கிலாங்கிலாந்து இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதற்கு இந்தப் போட்டியும் ஒரு உதாரணமாக சொல்லலாம்.
பென் ஸ்டோக்ஸ் கடைசியாக 43 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் வில்லி 14 ரன்களிலும், அடில் ரஷீத் 2 ரன்னிலும், மார்க் வுட் 5 ரன்னிலும் ஆட்டமிழக்கவே இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் நெட் ரன் ரேட் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023 உலகக் கோப்பையில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர்:
90 - நெதர்லாந்து vs ஆஸ்திரேலியா, Delhi, 2023 (டெல்லி)
139 – ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து, சென்னை
156 - ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம், தரம்சாலா
156 – இங்கிலாந்து vs இலங்கை, பெங்களூரு (பெங்களூரு)*
170 - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, வான்கடே
கலப்பு 50 மீ ரைபிள் ப்ரோன் எஸ்எச் 1 போட்டியில் பாரா ஷூட்டர் சித்தார்த்தா பாபு தங்கம் வென்று சாதனை!
உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் குறைந்தபட்ச ஆல் அவுட்
123 vs நியூசிலாந்து, வெல்லிங்டன், 2015
154 vs தென் ஆப்பிரிக்கா, பிரிஜ்டவுன், 2007
156 vs இலங்கை, பெங்களூரு, 2023*
168 vs இந்தியா, டன்பன், 2003
1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த 168 ரன்களைத் தாண்டிய ஒரு நாள் போட்டிகளில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆல்-அவுட் செய்யப்பட்ட குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்:
88 - தம்புல்லா, 2003
143 - தம்புல்லா, 2001
156 - பெங்களூரு, 2023*
180 - மொட்டுவா, 1993
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து
156/10 vs இலங்கை
170/10 vs தென் ஆப்பிரிக்கா
215/10 vs ஆப்கானிஸ்தான்
இலங்கை அணியின் பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்த போட்டியில் இடம் பெற்ற ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகளும், கசுன் ரஜீதா 2 விக்கெட்டுகளும்ம் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.