வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2ஆவது சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 13ஆவது ஒரு நாள் போட்டி வெற்றியை பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
வங்கதேசம்:
முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷிமாம் ஹூசைம், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், நசும் அகமது,
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசங்கா, தனஞ்சயா டில் சில்வா, தசுன் ஷனாகா (விக்கெட் கீப்பர்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா
India vs Pakistan Super 4: நாய்க்குடியுடன் கால்பந்து விளையாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
இதில், இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கருணாரத்னே 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹசன் மஹ்முத் பந்தில் முஷ்பிகுமர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு குசால் மெண்டிஸ் களமிறங்கினார். அவர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். எனினும், தொடக்க வீரர் பதும் நிசாங்கா 40 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோரிஃபுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
HISTORY IN COLOMBO! Sri Lanka have defeated Bangladesh to win their 13th ODI match in a row. They have bowled out oppositions in all 13 matches, which is a world record. Unbelievable 🇱🇰🔥🔥 pic.twitter.com/poIs7JsdG5
— Farid Khan (@_FaridKhan)
இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். மெண்டிஸ் மற்றூம் சமரவிக்ரமா இருவரும் நிலையான நின்று ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் மெண்டிஸ் 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஷோரிஃபுல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்தவர்கள் சரித் அசலங்கா 10, தனஞ்சயா டி சில்வா 6, கேப்டன் தசுன் ஷனாகா 24, துனித் வெல்லலகே 3, மஹீஷ் தீக்ஷனா 2 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
India vs Pakistan Super Fours: பாகிஸ்தானை பார்த்தாலே உதறுது – ஓபனாக பேசிய சுப்மன் கில்!
கடைசி வரை போராடிய சதீர சமரவிக்ரமா 72 பந்துகளில் 8 பவுண்டரி மற்றூம் 2 சிக்ஸர்கள் உள்பட 93 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார். இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் சமரவிக்ரமா 54 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 258 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேச அணி விளையாடியது.
முகமது நைம் மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மெஹிடி மிராஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, நைம் 21 ரன்களில் வெளியேறினார். இருவரும் கேப்டன் தசுன் ஷனாகா பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர், லிட்டன் தாஸ் களமிறங்கினார். அவர் 15 ரன்களில் வெளியேறவே அடுத்து வந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் தவ்ஹித் ஹிரிடோய் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஆனால், ரஹீம் 29 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஷனாகா ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே வங்கதேச அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்களில் தோல்வியை தழுவியது.
எனினும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இலங்கை தொடர்ந்து 13ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நடக்க உள்ளது.
Most consecutive wins in Men's ODI history:
Australia - 21
Sri Lanka - 13*
Sri Lanka is breaking record books. pic.twitter.com/qCOTc4W0YK