SRH vs LSG: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் இணைவு..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 04, 2022, 02:28 PM IST
SRH vs LSG: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் இணைவு..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல்லில் அதிக முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றி பெறுகின்றன.

இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது. எனவே முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சன்ரைசர்ஸ் அணி களமிறங்குகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி  இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்த நிலையில், ஒன்றில் வெற்றி பெற்றது. இன்று 3வது போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது.

 இந்த போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படுகிறது. அதிரடி ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அணியில் இணைவதால் கடந்த போட்டியில் ஆடிய ஆண்ட்ரூ டை நீக்கப்படுவார். ஜேசன் ஹோல்டர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி பேட்டிங், அபாரமான பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் லக்னோ அணியில் இணைவது அந்த அணிக்கு வலுசேர்க்கும்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ரவி பிஷ்னோய், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!