உலக கோப்பையில் ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை தகர்த்தார் அலைசா ஹீலி..!

Published : Apr 03, 2022, 09:59 PM IST
உலக கோப்பையில் ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை தகர்த்தார் அலைசா ஹீலி..!

சுருக்கம்

உலக கோப்பை ஃபைனலில் அதிக ரன் அடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை தகர்த்துள்ளார் அலைசா ஹீலி.  

ஐசிசி மகளிர் உலக கோப்பை நியூசிலாந்தில் நடந்தது. ஃபைனலில் இங்கிலாந்து மகளிர் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7வதுமுறையாக உலக கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அலைஸா ஹீலி மற்றும் ஹெய்ன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்களை குவித்தனர். ஹெய்ன்ஸ் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மூனியும் ஹீலியுடன் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஹீலி சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் அருமையாக பேட்டிங் ஆடி 170 ரன்களை குவித்தார் ஹீலி. மூனி 62 ரன்கள் அடித்தார். ஹீலி, ஹெய்ன்ஸ், மூனியின் சிறப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 356 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

357 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணி உலக கோப்பையை வென்றது.

இந்த போட்டியில் 138 பந்தில் 170 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலைசா ஹீலி, உலக கோப்பை ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த கிரிக்கெட் வீராங்கனை/வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 2007 ஒருநாள் உலக கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அடித்த 149 ரன்கள் தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தகர்த்துள்ளார் அலைசா ஹீலி.
 

PREV
click me!

Recommended Stories

33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!
வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் மின்னல் வேக சதம்.. 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ்!