IPL 2022: முதல் பந்தில் பவுண்டரி அடித்த மயன்க் 2வது பந்தில் அவுட்! 2 ஓவரில் 2 பெரிய விக்கெட்டை வீழ்த்திய CSK

Published : Apr 03, 2022, 08:06 PM IST
IPL 2022: முதல் பந்தில் பவுண்டரி அடித்த மயன்க் 2வது பந்தில் அவுட்! 2 ஓவரில் 2 பெரிய விக்கெட்டை வீழ்த்திய CSK

சுருக்கம்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடிவரும் நிலையில், மயன்க் அகர்வால் மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய 2 பெரிய விக்கெட்டுகளையும் முதல் 2 ஓவரில் தட்டி தூக்கியது சிஎஸ்கே அணி.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

சிஎஸ்கே அணி ஒரு மாற்றத்துடனும், பஞ்சாப் கிங்ஸ் அணி 2 மாற்றங்களுடனும் களமிறங்கின. சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே நீக்கப்பட்டு கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் ராஜ் பாவா ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே வைபவ் அரோரா மற்றும் ஜித்தேஷ் ஷர்மா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ட்வைன் ப்ரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக்கான், ஜித்தேஷ் ஷர்மா, ஒடீன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் முகேஷ் சௌத்ரி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கினார். ஆனால் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். கடந்த சீசனில் கேஎல் ராகுலுடன் பஞ்சாப் அணிக்காக ஓபனிங்கில் ஆடிய மயன்க் அகர்வால் சீசன் முழுக்க சிறப்பாக பேட்டிங் ஆடி அதிரடியான தொடக்கங்களை அமைத்து கொடுத்து 12 இன்னிங்ஸ்களில் 441 ரன்களை குவித்து பஞ்சாப் அணிக்கு அரும்பணியாற்றினார். ஆனால் இந்த சீசனில் கேப்டன்சி அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் பேட்டிங்கில் திணறிவருகிறார். முதல் 2 போட்டிகளிலும் சரியாக ஆடாத மயன்க் அகர்வால், இந்த போட்டியிலும் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

கேகேஆருக்கு எதிரான போட்டியில் காட்டடி அடித்து 8 பந்தில் 31 ரன்கள் அடித்த பானுகா ராஜபக்சா இந்த போட்டியில் வெறும் 9 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். முதல் ஓவரின் 2வது பந்தில் மயன்க் அகர்வாலும், 2வது ஓவரின் 2வது பந்தில் ராஜபக்சாவும் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணியின் 2 பெரிய விக்கெட்டுகளையும் முதல் 2 ஓவர்களிலேயே வீழ்த்திவிட்டது சிஎஸ்கே அணி.

இதையடுத்து தவானும் லிவிங்ஸ்டோனும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!