IPL 2022: சிஎஸ்கே அணி தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெற இதை செய்தே தீரணும்! ரவி சாஸ்திரி அதிரடி அட்வைஸ்

Published : Apr 03, 2022, 06:40 PM IST
IPL 2022: சிஎஸ்கே அணி தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெற இதை செய்தே தீரணும்! ரவி சாஸ்திரி அதிரடி அட்வைஸ்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி  2 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த நிலையில், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகியதையடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். 

ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் நல்ல தொடக்கமாக அமையவில்லை. முதலிரண்டு போட்டிகளிலுமே சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிராக 210 ரன்களை குவித்தும் கூட வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸை இன்று எதிர்கொள்கிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

இந்நிலையில், சிஎஸ்கே அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த சிஎஸ்கே ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனின் முதலிரண்டு போட்டிகளிலும் சீக்கிரம் ஆட்டமிழந்த நிலையில், அவர் கவனமாக ஆடவேண்டும் என்றும், தொடக்க வீரர்களில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, தொடக்க வீரர்கள் சோபிக்காததுதான் சிஎஸ்கேவிற்கு பிரச்னை. அதனால் தான் சிஎஸ்கே அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைய நேரிட்டது.  புதிய கேப்டன் பொறுப்பேற்றிருக்கிறார். அதனால் அவர் மீது அழுத்தம் இருக்கிறது. தோனி ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும். தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை என்றால் இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். 

ருதுராஜ் சிறந்த பேட்ஸ்மேன். பந்தை நன்றாக டைமிங் செய்யக்கூடிய, நிறைய ஷாட்டுகளை வைத்திருக்கும் பேட்ஸ்மேன் அவர். அவர் ஆரம்பத்தில் சிறிது நேரம் சில பந்துகளை தாக்குப்பிடித்து ஆடிவிட்டால் பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய வீரர். எனவே தொடக்க வீரர்கள் சோபிப்பதுதான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 தரவரிசை.. டாப் 5-க்குள் சென்ற திலக் வர்மா.. பவுலிங், பேட்டிங்கில் இந்தியர்கள் நம்பர் 1
பவுலர்களை துவம்சம் செய்த RO-KO கூட்டணி.. விஜய் ஹசாரே டிராபியில் சதம் விளாசி ரோகித்-விராட் அசத்தல்!