நான் மட்டும் கோலி கேப்டன்சியில் ஆடியிருந்தால் இந்தியா 3 உலக கோப்பைகளை ஜெயிச்சுருக்கும் - ஸ்ரீசாந்த்

By karthikeyan VFirst Published Jul 19, 2022, 4:39 PM IST
Highlights

தான் மட்டும் விராட் கோலியின் கேப்டன்சியில் ஆடியிருந்தால் இந்திய அணி இன்னும் 3 உலக கோப்பைகளை ஜெயித்திருக்கும் என்று ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.
 

இந்திய அணியில் 2005ம் ஆண்டு அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த், 2011ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடினார். மிரட்டலான ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், இந்தியாவிற்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடி முறையே 87, 75 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளையும் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வெகுசில வீரர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர். 

இதையும் படிங்க - விராட் கோலியுடன் பேச ஒரு 20 நிமிடம் கிடைத்தால் போதும்.. அவரை பழைய கோலியா மாத்திருவேன் - சுனில் கவாஸ்கர்

தனது அதிவேகமான பவுலிங்காலும், துல்லியமான யார்க்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் ஸ்ரீசாந்த். மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரான அவர் இந்திய கிரிக்கெட்டில் மேலும் ஜொலித்திருக்கலாம். ஆனால் 2013 ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்ற அவரது கெரியர், அத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சியில் தான் விளையாடியிருந்தால் இந்திய அணி 3 உலக கோப்பைகளை ஜெயித்திருக்கும் என்று ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், நான் மட்டும் விராட் கோலியின் கேப்டன்சியில் ஆடியிருந்தால், இந்திய அணி 2015 (ஒருநாள் உலக கோப்பை), 2019(ஒருநாள் உலக கோப்பை), 2021 (டி20 உலக கோப்பை) ஆகிய  3 ஆண்டுகளிலும் 3 உலக கோப்பைகளை வென்றிருக்கும் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

2015 ஒருநாள் உலக கோப்பையில் கோலி இந்திய அணியின் கேப்டன் இல்லை. தோனி தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!