உலகக் கோப்பையில் இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகள் விளையாடும் போட்டிக்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், ரசிகர்கள் இல்லாமல் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படும் நிலை தான் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் மைதாங்களில் போட்டியின் போது இருக்கைகள் காலியாகவே இருந்தன.
Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!
இந்த நிலையில் இன்று 2 போட்டிகள் நடத்தப்படுகிறது. அதில் தர்மசாலா மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே தர்மசாலா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியானது தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்தப் போட்டியிலும் மைதானம் வெறிச்சோடி தான் காணப்படுகிறது. இது தவிர பிற்பகல் 2 மணிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையிலான போட்டி நடக்க இருக்கிறது.
BAN vs AFG: உலகக் கோப்பை 3ஆவது லீக் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு!
இதைத் தொடர்ந்து நாளை 8 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2000 போலீசார் வரையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தான் இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
உலகக் கோப்பைக்காக இந்தியா உள்பட மற்ற அணிகள் விளையாடும் போட்டிக்காக நாளை 8 ஆம் தேதி, 13 ஆம் தேதி, 23 மற்றும் 27 ஆம் தேதிகளில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அக்டோபர் 8 – இந்தியா – ஆஸ்திரேலியா – சென்னை – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 13 – நியூசிலாந்து – வங்கதேம் – சென்னை – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 23 – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – சென்னை – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 27 – பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா – சென்னை – பிற்பகல் 2 மணி
India 100 Medals: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!
இதே போன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் வரும் 14 ஆம் தேதி அன்று வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலத்திற்கு அருகாமையிலுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.