ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை 3ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 3ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தர்மசாலா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதுவரையில் இரு அணிகளும் மோதிய 15 ஒரு நாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டியிலும், வங்கதேச அணி 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), முகமது நபி, நஜ்புல்லா ஜத்ரன், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.
India 100 Medals: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!
வங்கதேசம்:
லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ, மெஹிடி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிஜூர் ரஹ்மான்.
India vs Chinese Taipei: கபடியில் தங்கம் வென்ற இந்தியா – 100 பதக்கங்கள் கைப்பற்றி இந்தியா சாதனை!