சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த முருகன் (52) என்பவர் 14 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
India 100 Medals: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!
இதையடுத்து நேற்று 2ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் வரும் 8ஆம் தேதி நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தப் போட்டியானது நடக்க இருக்கிறது.
India vs Chinese Taipei: கபடியில் தங்கம் வென்ற இந்தியா – 100 பதக்கங்கள் கைப்பற்றி இந்தியா சாதனை!
சென்னை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான், சேப்பாக்காம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வெல்டிங் பணி நடந்து வந்துள்ளது. இதில், வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபுவின் கீழ் 52 வயதான முருகன் என்பவர் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
PAK vs NED: நேற்று அகமதாபாத், இன்று ஹைதராபாத் – வெறிச்சோடி காணப்பட்ட மைதானங்கள்!
இந்த நிலையில், தான், அவர் 14 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெல்டிங் மேற்பார்வையாளரான மகேந்திர பாபு என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நாளை நடக்க உள்ள போட்டியில் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.