IND vs SA: 2வது ODI டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. இளம் ஆல்ரவுண்டர் அறிமுகம்

By karthikeyan VFirst Published Oct 9, 2022, 1:31 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

2வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன.

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

ராஞ்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ஷம்ஸி ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் களமிறங்குகின்றனர். கேப்டன் டெம்பா பவுமா ஆடாததால், கேஷவ் மஹராஜ் கேப்டன்சி செய்கிறார்.

இந்திய அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு அவர்களுக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்பின் ஆல்ரவுண்டரான ஷபாஸ் அகமது இந்த போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். தீபக் சாஹர் காயமடைந்ததால் அவருக்கு மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆவேஷ் கான்.

இதையும் படிங்க - பும்ராவுக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் அவர் மட்டும்தான்..! டேல் ஸ்டெய்ன் தரமான ஆலோசனை

தென்னாப்பிரிக்க அணி:

ஜே மலான், குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மஹராஜ் (கேப்டன்), ஃபார்ச்சூன், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
 

click me!