INDW vs SAW: முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் குறைவான ஸ்கோருக்கு இந்திய அணியை சுருட்டிய தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Feb 2, 2023, 8:19 PM IST
Highlights

மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே அடித்தது.
 

முத்தரப்பு டி20 தொடர் ஃபைனல்:

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. இறுதிப்போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, யாஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ரேணுகா தாகூர் சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஸ்னே ராணா.

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்த், டாஸ்மின் ப்ரிட்ஸ், லாரா குடால், சன் லூஸ் (கேப்டன்), ட்ரயான், அன்னெரி டெர்க்சென், நடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நான்குலுலேகோ எம்லபா.

இந்திய அணி முதலில் பேட்டிங்:

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வீராங்கனைகள் அடித்து ஆடி ஸ்கோர் செய்யமுடியாமல் திணறினர். டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (0) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (11) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஹர்லீன் தியோல் தாக்குப்பிடித்து ஆடி ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார்.

உம்ரான் மாலிக்கின் மிரட்டல் வேகத்தில் 30 யார்டு வட்டத்தை தாண்டி விழுந்த ஸ்டம்ப் பெய்ல்..! வைரல் வீடியோ

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 22 பந்தில் 21 ரன் மட்டுமே அடித்தார். தீப்தி ஷர்மா 16 ரன்கள் அடித்தார். ஹர்லீன் தியோல் 46 ரன்கள் அடித்தார். எந்த வீராங்கனையுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அடித்து ஆடவில்லை. எளிதாக ரன் வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசி, இந்திய அணியை 20 ஓவரில் 109 ரன்களுக்கு சுருட்டியது தென்னாப்பிரிக்க அணி. 110 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்க மகளிர் அணி விரட்டுகிறது.

click me!