வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு

By karthikeyan VFirst Published Feb 2, 2023, 7:49 PM IST
Highlights

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

2019ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற நடப்பு ஒருநாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி:

கடைசியாக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இங்கிலாந்து அணி 2-1 என ஒருநாள் தொடரை இழந்தது. முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்த இங்கிலாந்து அணி, கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் ஆகிய ஆகிய இருவரும் சதமடித்தனர். பட்லர் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும் விஷயம்.

உம்ரான் மாலிக்கின் மிரட்டல் வேகத்தில் 30 யார்டு வட்டத்தை தாண்டி விழுந்த ஸ்டம்ப் பெய்ல்..! வைரல் வீடியோ

இங்கிலாந்து அணி அறிவிப்பு:

அடுத்ததாக இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டு, அதன்பின்னர் வங்கதேசத்துக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. மார்ச் 1 முதல் 14 வரை இந்த தொடர் நடக்கிறது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் 18 வயது இளம் வீரரான ரேஹான் அகமது இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்திய ரேஹான் அகமதுவுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடவிருப்பதால் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு அணியில் இடம் இல்லை.

இங்கிலாந்து ஒருநாள் அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), டாம் ஆபெல், ரேஹான் அகமது, மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன், சாகிப் மஹ்மூத், டேவிட் மலான், அடில் ரஷீத், ஜேசன் ராய், ஃபில் சால்ட், ரீஸ் டாப்ளி, ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

ஆஸி., டெஸ்ட் தொடரில் ஆடுகிறார் ரவீந்திர ஜடேஜா.. க்ரீன் சிக்னல் கொடுத்த என்சிஏ

இங்கிலாந்து டி20 அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), டாம் ஆபெல், ரேஹான் அகமது, மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான், அடில் ரஷீத், பென் டக்கெட், ஃபில் சால்ட், ரீஸ் டாப்ளி, வில் ஜாக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
 

click me!