ENG vs SA: ரூசோ அதிரடி பேட்டிங்.. 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மாபெரும் வெற்றி

Published : Jul 29, 2022, 02:08 PM IST
ENG vs SA: ரூசோ அதிரடி பேட்டிங்.. 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மாபெரும் வெற்றி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி கார்டிஃபில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 53 ரன்கள் அடித்து ஹென்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ரிலீ ரூசோ இங்கிலாந்தின் பவுலிங்கை அடி நொறுக்கி எடுத்தார்.

இதையும் படிங்க - WI vs IND: வெஸ்ட் இண்டீஸை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரூசோ, 55 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தபோதும், அவரால் சதத்தை எட்ட முடியாமல் போனது. வெறும் 4 ரன்கள் அடிக்க முடியாததால் சதத்தை தவறவிட்டார். ஆனால் அவரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 207 ரன்களை குவித்தது.

208 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் பட்லர்(29), ராய்(20), பேர்ஸ்டோ(30), மொயின் அலி(28) ஆகிய வீரர்கள் அதிரடியாக தொடங்கினாலும் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. மற்ற வீரர்கள் மிக சொற்ப ரன்களில் வெளியேற, 16.4 ஓவரில் 149 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இதையும் படிங்க - SL vs PAK: 2வது டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை..!

இதையடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நான் ஒன்றும் அவுட் ஆஃப் பார்ம் இல்லை.. ஜஸ்ட் ரன் அவுட் தான்.. மனம் தளராத சூர்யகுமார் யாதவ்
IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!