தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலும், நியூசிலாந்து 2ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும் உள்ளன.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இலங்கை!
நெதர்லாந்து விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில், ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 2.30 மணிக்கு போட்டி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன காரணமாக டாஸ் போடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 7 போட்டிகளில் 6ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதே போன்று உலகக் கோப்பை கிரிகெட்டில் விளையாடிய 3 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 15ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.