யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்‌ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான்: சவுரவ் கங்குலி!

By Rsiva kumar  |  First Published Aug 25, 2023, 2:53 PM IST

"இது ஒரு நல்ல தேர்வு என்று நான் நினைக்கிறேன். யாராவது காயம் அடைந்தால் சஹால் இன்னும் திரும்பி வர முடியும். இது 17 பேர் கொண்ட அணி, இருவர், எப்படியும் வெளியேற வேண்டும்," என்று கங்குலி கூறினார்.


ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரானது வரும் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், யுஸ்வேந்திர சஹால் இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

4ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் யார் யார்?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்ததது குறித்து முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்‌ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான்.

யோ யோ டெஸ்ட் செய்த, ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா!

யாராவது காயம் அடைந்தால் சஹால் இன்னும் திரும்பி வர முடியும். தற்போது 17 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இருவர் நீக்கப்பட்டு, உலகக் கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வரும் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது ICC ODI rankings பாகிஸ்தான் 2ஆவது இடத்திலும், இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, ஷாகீத் அப்ரிதி, ஹரீஷ் ராஃப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

மென்டாலிட்டி மான்ஸ்டர் – பிரக்ஞானந்தாவை புகழ்ந்து பேசிய கார்ல்சன்!

click me!