யோ யோ டெஸ்ட் செய்த, ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா!

By Rsiva kumar  |  First Published Aug 25, 2023, 12:03 PM IST

ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் யோ யோ டெஸ்ட் செய்த நிலையில், கேஎல் ராகுல் மட்டும் யோ யோ டெஸ்ட் மேற்கொள்ளவில்லை.


ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்க உள்ள நிலையில், தற்போது இந்திய வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்துள்ளனர். ஆதலால், அவர்கள் தங்களது உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

மென்டாலிட்டி மான்ஸ்டர் – பிரக்ஞானந்தாவை புகழ்ந்து பேசிய கார்ல்சன்!

Tap to resize

Latest Videos

அங்கு, வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதில், வீரர்கள் எந்த அளவிற்கு ஸ்டாமினா, உடல் தகுதியுடன் இருக்கிறார்கள், எவ்வளவு நேரம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதை இந்த யோ யோ டெஸ்ட் தெரியப்படுத்தும். இந்த யோ யோ டெஸ்டில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், கேஎல் ராகுல் கலந்து கொள்ளவில்லை. இதுனால் வரையிலும் ராகுல் பெங்களூருவில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அவர் யோ யோ டெஸ்ட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

World Cup 2023: உலகக் கோப்பை பயிற்சி போட்டி அட்டவணை வெளியீடு!

இந்த யோ யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த டெஸ்டில் மணீஷ் பாண்டே மட்டுமே 17 மதிப்பெண்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து சென்றிருந்த இந்திய அணி வீரர்கள் இன்று பெங்களூரு முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதில், ஜஸ்ப்ரித் பும்ரா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற உள்ளனர்.

2023 World Cup Champion: டை பிரேக்கரில் வெற்றி பெற்று சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன்!

click me!