இந்த அணியெல்லாம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்: சவுரவ் கங்குலி கணிப்பு!

Published : Jul 08, 2023, 12:39 PM IST
இந்த அணியெல்லாம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்: சவுரவ் கங்குலி கணிப்பு!

சுருக்கம்

உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு செல்வதற்கு இந்த 5 அணிகளுக்குத் தான் வாய்ப்பிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியாவில் 4ஆவது முறையாக உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் கன்ஃபார்ம்!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 5 உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ள நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தால் அந்தப் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு சென்ற லைகா கோவை கிங்ஸ்: கடைசி வரை போராடிய சரத் குமார் 8 சிக்ஸர்கள் உடன் 62 ரன்!

இந்த நிலையில் இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கொல்கத்தா தாதா சவுரவ் கங்குலி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நுழையும் அணிகள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எப்போதும் ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியுள்ளது.

இதுவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் சொல்லவா வேணும். இந்த முறை பாகிஸ்தான் அணி சிறப்பு வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

சரித்திரம் படைத்த தந்தை மகன் ஜோடி – சச்சின், டிராவிட் விக்கெட் உள்பட 2003ல் 4 விக்கெட், மகன் இப்போ 5 விக்கெட்!

ஆதலால், இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்த வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஜெய் தோனி, ஜெய் ஜெய் தோனி; 77 அடி உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!