டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் நடுவரிசையில் இறங்கி விளையாடினால், அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்த போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் இந்திய அணி வீரர்களை சந்திக்க வந்தார்.
அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சுப்மன் கில்லை அறிமுகம் செய்து வைத்தார். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவித்து வரும் சுப்மன் கில், இன்னும் டெஸ்ட் போட்டிகளில் திறமையை நிரூபிக்கவில்லை. இதுவரையில் ரோகித் சர்மா உடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடிய சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடுவரிசையில் விளையாட வேண்டும்.
தோனி பிடிக்க அது தான் காரணம்: மனம் திறந்த வாசிம் ஜாஃபர்!
இதுவரையில் கில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 921 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 அரை சதமும், 2 சதமும் அடங்கும். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நடு வரிசையில் விளையாடி வந்த கில் இந்திய அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா உடன் இணைந்து விளையாடினார். முன்னாள் சீனியர் வீரர்கள் எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நடுவரிசையில் இறங்கி விளையாடியிருக்கின்றனர்.
இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!
நடுவரிசையில் விளையாடும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதகமான சூழல் ஏற்படும். இதன் காரணமாக சீனியர் வீரர்கள் நடுவரிசையில் விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இதனால், இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் சுப்மன் கில் இனி வரும் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் இறங்கி விளையாடினால், அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!
ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்கள் பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசையில் இறங்கி விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இதற்கு உதாரணமாக சச்சினை சொல்லலாம். இதே போன்று கில் 3 அல்லது 5ஆவதாக களமிறங்கி விளையாடினால், அது அவருக்கு சாதகமாக அமையும்.