ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியின் மூலமாக பதிலடி கொடுத்த இங்கிலாந்து; கடைசி நேரத்தில் கை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்!

By Rsiva kumar  |  First Published Jul 9, 2023, 8:59 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் 6ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த போட்டியின் போது 2ஆவது இன்னிங்ஸில் ஆஸி, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தோனி பிடிக்க அது தான் காரணம்: மனம் திறந்த வாசிம் ஜாஃபர்!

Tap to resize

Latest Videos

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் வீரர்கள் முதல் பிரதமர்கள் வரை ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்று ஒவ்வொருவரும் விவாதம் செய்தனர். இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், இங்கிலாந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. இதில், ஆஸ்திரேலியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 251 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.

இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!

இதில் பென் டக்கெட் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜாக் கிராவ்லி 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 21 ரன்கள் எடுக்க, ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடி 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவசப்பட்டு அடித்து ஆட முற்பட்டு 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோவ் 5 ரன்களில் வெளியேறினார். இறுதியாக கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் எடுக்க, மார்க் உட் 16 ரன்கள் சேர்க்கவே, இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!

அதோடு, கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில் 2ல் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரையும் கைப்பற்றும். இதே போன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஒரு போட்டியில் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!