ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடக்க உள்ள 9ஆவது லீக் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் இடம் பெறுவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் நியூசிலாந்து பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து அடுத்தடுத்து போட்டிகள் நடத்தப்பட்டன. வார்ம் அப் போட்டிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த இந்திய அணி, மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை திரும்பியது.
New Zealand vs Netherlands: 2 மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
இந்திய அணி சென்னை வந்த போது சுப்மன் கில்லிற்கு காய்ச்சல் தொற்று இருந்துள்ளது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். அதில், அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். ஆனால், அவர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலின் பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 11 ஆம் தேதி டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 9ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் போட்டியில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது.
IND vs AUS: சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா உலகக் கோப்பைக்காக வந்த நடிகர் வெங்கடேஷ், சதீஷ்!
இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சுப்மன் கில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இடம் பெறுவது குறித்து அணி நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் சுப்மன் கில் ஒரு நாள் போட்டிகளில் 1230 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதமும், 5 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shubman Gill is likely to miss the Afghanistan match. [ANI]
- He is recovering well & will be travelling with the team to Delhi. pic.twitter.com/UZ2jjZmPSG