ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில்லிற்கு ஓய்வு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று இந்தூரில் நடந்தது.
இதில், முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும் எடுத்தனர். கேஎல் ராகுல் 52 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 72* ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு 317 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Asian Games 2023: 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது!
எனினும் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 99 ரன்களில் தோல்வி அடைந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்று ஆஸ்திரேலியா இழந்தது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 27 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ராஜ்கோட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தப் போட்டியில் விளையாட உள்ளனர். அதோடு, தொடரை கைப்பற்றிய நிலையில், இவர்கள் இந்தப் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS: விட்டு விட்டு மழை: ஓவர்கள் குறைப்பு: ஆஸ்திரேலியாவிற்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு!