
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது இந்தூரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் வெளியேற சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாடி 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
IND vs AUS: விட்டு விட்டு மழை: ஓவர்கள் குறைப்பு: ஆஸ்திரேலியாவிற்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு!
ஒரு நாள் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மன் கில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்து 104 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் இருவரும் அதிரடி காட்டினர். இஷான் கிஷான் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உடன் 31 ரன்கள் எடுத்தார். ராகுல் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உடன் 52 ரன்களில் வெளியேறினார்.
IND vs AUS: புதிய வரலாற்று சாதனை படைத்த இந்தியா – ODIல் 3000 சிக்ஸர்கள் அடித்து சாதனை!
இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். கேமரூன் க்ரீன் வீசிய ஓவரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசினார். கடைசி வரை ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்தார். அவர் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஜடேஜா 13 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 399 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 2ஆவது ஓவரில் முக்கியமான 2 விக்கெட்டை இழந்தது. பும்ராவிற்குப் பதிலாக அணியில் இடம் பெற்ற பிரஷித் கிருஷ்ணா தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 9 ரன்கள் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. இதன் காரணமாக 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு 317 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுனேஷ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசில வந்த சீன் அபாட் அதிரடியாக விளையாடி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது மெய்டன் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
IND vs AUS: ODI வரலாற்றில் அதிவேகமாக சதங்கள் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!
சீன் அபாட் 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோஷ் ஹசல்வுட் 23 ரன்களில் வெளியேற இறுதியாக வந்த ஸ்பென்சர் ஜான்சன் டக் அவுட்டில் வெளியேற இறுதியாக ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்து 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
பந்து வீச்சு தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலமாக இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2 -0 என்று கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது.
IND vs AUS: கடைசி வாய்ப்பில் சதம் விளாசி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர், அடிக்கடி வைத்தியம் பார்த்தது ஏன்?
மேலும், கடைசியாக நடந்த 5 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது. இதில், 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராகவும், 2 போட்டிகள் இந்திய அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.