ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 18 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக 3000 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது இந்தூரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் வெளியேற சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாடி 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மன் கில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்து 104 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் இருவரும் அதிரடி காட்டினர். இஷான் கிஷான் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உடன் 31 ரன்கள் எடுத்தார். ராகுல் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உடன் 52 ரன்களில் வெளியேறினார்.
IND vs AUS: ODI வரலாற்றில் அதிவேகமாக சதங்கள் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!
இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். கேமரூன் க்ரீன் வீசிய ஓவரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசினார். கடைசி வரை ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்தார். அவர் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஜடேஜா 13 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 399 ரன்கள் குவித்துள்ளது.
IND vs AUS: கடைசி வாய்ப்பில் சதம் விளாசி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர், அடிக்கடி வைத்தியம் பார்த்தது ஏன்?
இந்தப் போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 3000 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிக்ஸர்கள்:
19 vs ஆஸ்திரேலியா, பெங்களூரு, 2013
19 vs நியூசிலாந்து, இந்தூர், 2023
18 vs பெர்முடா, போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2007
18 vs நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ஜ், 2009
18 vs ஆஸ்திரேலியா, இந்தூர், 2023
IND vs AUS: 2023ல் ரோகித் சர்மாவின் சிக்ஸர் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்:
481/6 – இங்கிலாந்து, நாட்டிங்காம்., 2018
438/9 – தென் ஆப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க், 2006
416/5 – தென் ஆப்பிரிக்கா, செஞ்சூரியன், 2023
399/5 - இந்தியா, இந்தூர், 2023
383/6 - இந்தியா, பெங்களூரு, 2013
Asian Games 2023: ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலியா பவுலர்கள்:
0/113 – மிக் லெவிஸ் vs தென் ஆப்பிக்கா, ஜோகன்னஸ்பர்க், 2006
0/113 – ஆடம் ஜம்பா vs தென் ஆப்பிரிக்கா, செஞ்சூரியன், 2023
2/103 – கேமரூன் க்ரீன் vs இந்தியா, இந்தூர், 2023
0/100 – ஆண்ட்ரூ டை vs இங்கிலாந்து, நாட்டிங்காம், 2018
3/92 – ஜே ரிச்சர்ட்சன் vs இங்கிலாந்து, நாட்டிங்காம், 2018
இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் கொடுத்த பவுலர்கள்:
0/106 – நுவான் பிரதீப் (இலங்கை), மொஹாஇ, 2017
0/105 – டிம் சவுதி (நியூசிலாந்து), கிறிஸ்ட்சர்ஜ், 2009
2/103 – கேமரூன் க்ரீன் (ஆஸ்திரேலியா), இந்தூர், 2023
3/100 – ஜாகோப் டஃபி (நியூசிலாந்து), இந்தூர், 2023
இந்தூரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் ஸ்கோர்கள் (ODI)
292/9 vs இங்கிலாந்து, 2008
418/5 vs வெஸ்ட் இண்டீஸ், 2012
247/9 vs தென் ஆப்பிரிக்கா, 2015
385/9 vs நியூசிலாந்து, 2023
399/5 vs ஆஸ்திரேலியா, 2023
இந்தூரில் நடந்த கடைசி 6 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.