ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்யவே இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கெய்க்வாட் 8 ரன்களில் ஜோஷ் ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
IND vs AUS: ODI வரலாற்றில் அதிவேகமாக சதங்கள் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!
ஒரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் போட்டியில் தனது 3 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு ஷ்ரேயாஸ் 90 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் குவித்து சீன் அபாட் பந்தில் ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மன் கில் ஒரு நாள் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 97 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் எடுத்து கேமரூன் பந்தில் ஆட்டமிழந்தார்.
IND vs AUS: கடைசி வாய்ப்பில் சதம் விளாசி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர், அடிக்கடி வைத்தியம் பார்த்தது ஏன்?
அதன் பிறகு கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். கிஷான் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். விக்கெட் கை வசம் இருந்த நிலையில், இருவரும் அதிரடி காட்டினர். ராகுல் வந்த 2ஆவது பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் ஸ்டேடியத்தின் மேற்கூரையில் பட்டு கீழே விழுந்தது.
IND vs AUS: 2023ல் ரோகித் சர்மாவின் சிக்ஸர் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக தனது 15ஆவது ஒரு நாள் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆடினார். க்ரீன் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசினார்.
Asian Games 2023: ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் 72 ரன்கள் நாட் அவுட் எடுத்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஒரு நாள் போட்டியில் 383/6, ரன்கள் எடுத்தது.
அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டியில் 3000 சிக்ஸர்கள் அடித்த ஒரே அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.