நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான முறையில் டெவான் கான்வே கேட்ச் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கமும், புகைப்படமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நேற்று தரம்சாலாவில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய டீம் இந்தியா ரோகித் சர்மாவின் அதிரடி மற்றும் விராட் கோலியின் நிதானமான ஆட்டத்தால் 48 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 274 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Shreyas Iyer Best Fielder Medal
இந்தப் போட்டியில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடமும் பிடித்தது. இந்தப் போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய 3.3ஆவது ஓவரில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே அடித்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் டைவ் அடித்து பிடித்து அசத்தினார். அதன் பிறகு பீல்டிங்கில் கோச் திலீப்பிடம் தனக்கு பதக்கம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தேசியக் கொடியை குப்பை தொட்டியில் வீசிய காவல் உதவி ஆய்வாளர்; காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!
Indian team is a family 🇮🇳
Huge credit to Rohit & Dravid for making this beautiful atmosphere among the group. pic.twitter.com/LiR9lKw3Xq
இந்த நிலையில் தான், போட்டிக்குப் பிறகு டிரெஸிங் ரூமில் மைதானத்தில் இந்திய வீரர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது முகமது சிராஜ் பீல்டிங், விராட் கோலியின் ரன்னிங் கேட்ச் ஆகியவற்றிற்கு பாராட்டு தெரிவித்தார். அதன் பிறகு அனைவரையும் டிரெஸிங் ரூமை விட்டு மைதானத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டார். அப்போது பறக்கும் கேமரா மூலமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கான புகைப்படம் கொண்டு வரப்பட்டு அவரது கழுத்தில் மாலையாக அணிவிக்கப்பட்டது. பதக்கத்தை ரவீந்திர ஜடேஜா வழங்கினார்.
எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைக்கு சொந்தக்காரர் பிஷன் சிங் பேடி – 1560 விக்கெட்டுகள்!
இப்படி வித்தியாசமான முறைகளில் எல்லா பீல்டிங் பயிற்சியாளர் திலீப் வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்து வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பாக கேட்ச் பிடித்த ரவீந்திர ஜடேஜாவிற்கு சிறந்த பீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக மைதானத்தில் இருந்த டிஜிட்டல் ஸ்கிரீனில் ஜடேஜா பிடித்த கேட்ச் போட்டுக் காட்டப்பட்டது. இதனை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Last time we revealed our "Best fielder winner" on the giant screen 🤙🏻
Our "Spidey sense" says this time we've taken it to new "heights" 🔝
Presenting the much awaited Dressing room Medal ceremony from Dharamshala 🏔️ - By | | |