ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 22ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர்.
தேசியக் கொடியை குப்பை தொட்டியில் வீசிய காவல் உதவி ஆய்வாளர்; காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!
இதில், இமாம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷபீக் மற்றும் பாபர் அசாம் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில், ஷபீக் தனது 3ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடிய ஷபீக் 103 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில், 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கும்.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 62 பந்துகளில் அரைசதம் அடித்த ஷபீக் 75 பந்துகள் விளையாடி 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் சேர்த்து முதல் உலகக் கோப்பையில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது பந்தில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 8 ரன்களில் நூர் அகமது பந்தில் முஜூப் உர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைக்கு சொந்தக்காரர் பிஷன் சிங் பேடி – 1560 விக்கெட்டுகள்!
அதன் பிறகு வந்த சவுத் சகீல் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய பாபர் அசாம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 74 ரன்களில் நூர் அகமது பந்தில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
இறுதியாக ஷதாப் கான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் இணைந்து கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஷதாப் கான் 40 ரன்களில் ஆட்டமிழக்க, இப்திகார் அகமது 27 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது.
Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய நூர் அகமது 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும், முகமது நபி மற்றும் அஷ்மாதுல்லா உமர்சாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Asian Para Games Hangzhou: 5000 மீ பிளைண்ட் தடகளப் போட்டியில் இந்தியாவின் அங்கூர் தாமாவிற்கு தங்கம்!