எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைக்கு சொந்தக்காரர் பிஷன் சிங் பேடி – 1560 விக்கெட்டுகள்!

By Rsiva kumar  |  First Published Oct 23, 2023, 5:48 PM IST

இதுவரையில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை பிஷன் சிங் பேடி படைத்திருக்கிறார். அவர், முதல் தர கிரிக்கெட்டில் 1560 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்து வளர்ந்தவர் பிஷன் சிங் பேடி. முதல் முதலாக பஞ்சாப் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு டெல்லி அணிக்கு விளையாடினார். ரஞ்சி டிராபி தொடர்பிலும் விளையாடியுள்ளார். பேடி பல ஆண்டுகளாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நார்தாம்ப்டன்ஷையரை பிரதிநிதித்துவப்படுத்தினார். பிஷன் சிங் பேடி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 656 ரன்களும், 266 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். இதில் 14 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். ஒரு முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். கடந்த 197 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!

Tap to resize

Latest Videos

ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் தோள்பட்டை மற்றும் கை விரல்கள் மிருதுவாக இருக்க வேண்டும். அதற்கு தனது உடைகளை தானே துவைப்பதாக கூறியுள்ளார். இதுவே அதற்கு சிறந்த பயிற்சி என்று சுட்டிக் காட்டியுள்ளார். பிஷன் சிங் பேடிக்கு ஒரு அங்கத் பேடி என்ற மகன் இருக்கிறார். அவர் நடிகராக இருக்கிறார். பாலிவுட் நடிகை நேஹா தூபியா என்ற மருமகளும் இருக்கிறார்.

Asian Para Games Hangzhou: 5000 மீ பிளைண்ட் தடகளப் போட்டியில் இந்தியாவின் அங்கூர் தாமாவிற்கு தங்கம்!

இதுவரையில் எந்த இந்திய வீரரும் கைப்பற்றாத சாதனையை பேடி படைத்திருக்கிறார். ஆம், முதல் தர கிரிக்கெட்டில் 370 போட்டிகளில் விளையாடி 1560 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார்.

உயரம் தாண்டுதல் T64 பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – பிரவீன் குமார் 2.02 மீ உயரம் தாண்டி சாதனை!

இந்த நிலையில் தான் பிஷன் சிங் பேடி உடல் நலக்குறைவு காரணமாக தனது 77ஆவது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியின் போது கூட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பிஷன் சிங் பேடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4th Asian Para Games: உயரம் தாண்டுதல் T47 பிரிவில் சாதனை படைத்து தங்கம் வென்ற நிஷாத் குமார்!

click me!