ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 23 ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 22ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் முகமது நவாஸிற்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஷதாப் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஃபசல்ஹக் ஃபாரூக்கி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நூர் அகமதுவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, உசாமா மிர், ஷதாப் கான், ஹசன் அலி, ஷகீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்
ஆப்கானிஸ்தான்:
ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, முகமது நபி, இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக்.
4th Asian Para Games: உயரம் தாண்டுதல் T47 பிரிவில் சாதனை படைத்து தங்கம் வென்ற நிஷாத் குமார்!
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், பாகிஸ்தா எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது ஆஸ்திரேலியா வீரர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகினர். இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளில் பாகிஸ்தான் 2 போட்டியில் வெற்றி, 2 போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி, 3 போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.