ஷேன் வாட்சனை தெறிக்கவிட்ட அக்தரின் பவுன்ஸர்.. விக்கெட் கீப்பரே மிரண்டுபோன தரமான வீடியோ

By karthikeyan VFirst Published May 31, 2020, 10:43 PM IST
Highlights

ஷேன் வாட்சனை தனது மிரட்டலான பவுன்ஸரால் அக்தர் தெறிக்கவிட்ட சம்பவத்தின் வீடியோவை பார்ப்போம். 
 

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ் ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர். 

அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

அவரது கெரியரில் பல மிரட்டல் பவுன்ஸர்களை வீசியுள்ளார். பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியபோதே, அந்த அணியை அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தார் அக்தர். 

2002ல் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆடியபோது பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 256 ரன்கள் அடித்தது. ரொம்ப கடினமில்லாத அந்த இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியை அக்தரின் அதிவேக மிரட்டல் பந்துவீச்சால் 140 ரன்களிலேயே சுருட்டி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அக்தர் 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக எகிறும். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். அந்தவகையில், அந்த குறிப்பிட்ட போட்டியில் ஷேன் வாட்சனுக்கு ஒரு பவுன்ஸர் வீசினார். வாட்சன் எதிர்பார்த்ததை விட, திடீரென எகிறிய அந்த பந்தை கண்டு வாட்சன் மிரண்டுபோனார். அந்த பந்தை விக்கெட் கீப்பராலேயே பிடிக்க முடியாமல் பவுண்டரிக்கு போனது. அந்த வீடியோ இதோ..
 

click me!