ஆல்டைம் ஐபிஎல் லெவனில் அதிகமான வெளிநாட்டு வீரர்கள்.. கேப்டன் தோனி

By karthikeyan VFirst Published May 31, 2020, 10:36 PM IST
Highlights

இந்திய மகளிர் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால் வீடுகளில் முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடன் உரையாடிவருகின்றனர். முன்னாள் வீரர்கள் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய 2 சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்ததில் ரோஹித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் முறையே 3 மற்றும் 4வது இடங்களில் உள்ளனர். இருவருமே காட்டடி அடிக்கக்கூடிய சிறந்த தொடக்க வீரர்கள். 

மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தவிர வேறு யாரையும், அந்த வரிசைக்கு பெரும்பாலானோர் யோசித்து பார்க்க மாட்டார்கள். ஐபிஎல்லில் டாப் ரன் ஸ்கோரர் கோலி தான். நான்காம் வரிசையில் டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ள ஜெமிமா, ஐந்தாம் வரிசைக்கு அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலையும் ஆறாம் வரிசை வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸையும் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராக கண்டிப்பாக தோனி தான். அவரையே தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளார் ஜெமிமா. முகமது நபி, ஜடேஜா, ரஷீத் கான் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ள ஜெமிமா, ஒரேயொரு ஃபாஸ்ட் பவுலராக பும்ராவை மட்டும் தேர்வு செய்துள்ளார். 

ஜெமிமா, தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனில் 5 இந்திய வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்துள்ளார். 

ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்த ஐபிஎல் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆண்ட்ரே ரசல், பென் ஸ்டோக்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), முகமது நபி, ஜடேஜா, ரஷீத் கான், பும்ரா.
 

click me!