
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் அறியப்படும் நிலையில், இந்த பட்டியலில் அண்மைக்காலத்தில் இணைந்துள்ளார் பாகிஸ்தானின் பாபர் அசாம்.
மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்து அந்த அணியை வழிநடத்திவருகிறார். பாபர் அசாமின் கேப்டன்சி மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு பாரபட்சமாக இருந்ததாகவும், கேப்டன் பாபர் அசாம் தனக்கு வேண்டப்பட்ட வீரர்களை மட்டும் அணியில் எடுத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
IND vs AUS: கேஎல் ராகுல் vs ஷுப்மன் கில்.. 3வது டெஸ்ட்டில் ஓபனர் யார்..? தாதா கங்குலியின் சாய்ஸ்
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பாபர் அசாம் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் வலுத்தன. கேப்டன்சி அழுத்தத்தால் அவரால் சரியாக பேட்டிங் ஆட முடியவில்லை என்பதால், அவர் ஏதாவது ஒரு ஃபார்மட்டின் கேப்டன்சியிலிருந்து விலகலாம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தியிருந்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் பாபர் அசாமுக்கு சரியாக ஆங்கிலம் பேச தெரியாததை ஷோயப் அக்தர் விமர்சித்திருந்தார். அந்த அணி வீரர்கள் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் பேச திணறுவதை விமர்சித்திருந்தார் அக்தர்.
இந்நிலையில், இப்போது பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளுக்கான கேப்டனை மாற்றலாம் என்று கருத்து கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், ஷதாப் கான் ஸ்மார்ட்டான வீரர். அவரது கிரிக்கெட் திறமையும், மூளையும் அபாரமானது. அவர் தொடர்ந்து கற்று வளர்ந்துகொண்டே இருக்க விரும்புகிறார். அது ரொம்ப நல்ல விஷயம். அவரது தவறுகளை ஏற்றுக்கொண்டு அதை திருத்திக்கொள்ள விழைகிறார். ஷதாப் கான் கடந்த 2 ஆண்டுகளில் அவரது பவுலிங்கை மேம்படுத்த கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது தோற்றத்தை மெருகேற்றியிருப்பதுடன், ஆங்கிலத்திலும் நன்றாக பேசுகிறார். எனவே வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக அவரை நியமிக்கலாம்.
சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் என் மீது காட்டிய அன்பு, அக்கறையை மறக்கவேமாட்டேன்! வாசிம் அக்ரம் உருக்கம்
ஷதாப் கான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தில் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்வார். ஷதாப் கானின் அணுகுமுறை, உடல்மொழி ஆகிய அனைத்துமே நன்றாக உள்ளது. அவர் ஆக்ரோஷமான கேப்டனாகவும் இருக்கிறார். ஷதாப் கான் சிறந்த கேப்டன். நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் ஷதாப் கான் கேப்டன்சியில் ஆடும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி கோப்பையை வெல்லக்கூட வாய்ப்பு உள்ளது என்றார் அக்தர்.